ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே என்ற படத்தை நாயகனாக நடித்து இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை இவானா நடிக்கிறார்.
சத்யராஜ் மற்றும் ராதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ‘சாச்சிட்டாலே’ என்னும் முதல் பாடல் இன்று(ஆகஸ்ட்1) மாலை வெளியாகிறது. யுவன் கம்போசிங்கில் வெளியாகும் பாடலுக்காக அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இதனையொட்டி படக்குழுவினர் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் பாடல் கம்போசிங்கிற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது, ‘எனக்கு பழைய யுவன் வேணும் சார்’ என்று மிகுந்த ஆர்வத்துடன் எமோஷனலாக பிரதீப் கேட்கிறார் இதனைக் கேட்ட யுவன்சங்கர் ராஜா சற்று நேரம் நிதானமாக யோசித்து விட்டு, பழைய டிரங்க் பெட்டி ஒன்றை திறக்கிறார்.
அதிலிருந்து தனது இளம் வயது புகைப்படத்தை எடுத்துக் கொடுத்து இதுதான் பழைய யுவன்சங்கர்ராஜா என்று அவர் கூற பிரதீப்பிற்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. பின்பு இயக்குநரிடம், பழைய யுவனோ, புது யுவனோ கிடையாது.
அந்த யுவனும் இந்த யுவனும் ஒன்னுதான் எனக் கூலாக சொல்கிறார். இந்தப் புரோமோ திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவன்சங்கர்ராஜாவுக்கு வாழ்த்துக் கூறுவது போல வெளியாகியுள்ளது.
இராமானுஜம்
congrats bala. oru “thamizhan”avathu irukrane.. thank God.🙏
இது ஒரு பெண்ணைக் குறித்த பாடலாகத் தோன்றுகிறது. அப்படியானால் ‘சாச்சிட்டாளே’ என்றுதானே இருக்க வேண்டும். இந்த அடிப்படைத் தமிழ்கூடத் தெரியாத முட்டாப்பயலுங்களா நீங்க?
congrats bro. oru “thamizhan”avathu irukrane.thank God.🙏