லவ் டுடே படம் இந்தியிலும் தயாராகும் நிலையில், படம் தயாரானபின் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பெயரை சேர்க்க அமீர்கான் தரப்பு முடிவு செய்துள்ளது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்த படம் லவ் டுடே.
2022ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிகபட்ச லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்று தந்த படம்.
ஆறு கோடியில் தயாரிக்கப்பட்ட லவ் டுடே தமிழ்நாட்டில் மட்டும் 70கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
இதனால் லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமை வாங்க கடும் போட்டி நிலவியது.
இந்தியில் இந்தக்கதையில் அமீர்கான் மகனை கதாநாயகனாக நடிக்க வைக்கத் திட்டமிட்டு கதையின் உரிமையை கேட்டிருக்கிறார்கள்.
இதனை அறிந்த ஏஜிஎஸ் நிறுவனம், இந்தியிலும் நாங்களே தயாரிக்கிறோம் என்று தங்கள் விருப்பத்தை கூறியிருக்கிறார்கள்.
அதை ஏற்றுக்கொள்ளாமல் உரிமைக்கான தொகையைச் சொல்லுங்கள் என்று கேட்க, விலையை அதிகமாக கூறினால் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10கோடி ரூபாய் என ஏஜிஎஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.
இதை கேட்ட அமீர் கான் தரப்பு நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் 8கோடி ரூபாய் என்று விலையை முடிவு செய்திருக்கிறார்கள்.
8கோடியில் சரிபாதி 4கோடியை இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு கொடுத்து உள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.
அந்தப் படத்தில் நாயகனாக நடித்து இயக்கியதற்காக அவர் வாங்கிய சம்பளத்தை காட்டிலும் மூன்று மடங்கு இந்தி ரீமேக் உரிமை விற்பனை மூலம் வந்த தொகையில் பங்கு தொகையாக ஏஜிஎஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறது.
பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இதுபோன்று நேர்மையாக நடந்துகொள்வதில்லை.
அந்நிறுவனத்தின் இந்த நற்செயலுக்கு உடனே ஒரு நற்பலன் கிடைத்திருக்கிறது.
இந்தி உரிமைக்கு எட்டுகோடி கொடுத்துவிட்டாலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் விருப்பத்தை உணர்ந்து இந்தியில் படம் தயாரானபின் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பெயரையும் படத்தில் குறிப்பிடுங்கள் என்று நடிகர் அமீர் கான் தரப்பில் கூறப்பட்டுள்ளதாம்.
இராமானுஜம்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
தங்கம் விலை வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!