பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கும் லவ் டுடே திரைப்படம் ஓடிடியில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் லவ் டுடே கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தமிழில் வெளியானது. இயக்குநராக மட்டும் அல்லாது பிரதீப் நடிப்பு பாடல் என அசத்தியிருந்தார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும், சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
காதலன், காதலி இருவரும் தங்களது செல்போன்களை மாற்றிக் கொள்ளும், காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக வெளியான லவ் டுடே ரசிகர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் லவ் டுடே டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தெலுங்கிலும் லவ் டுடே திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது, லவ் டுடே ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம், வரும் டிசம்பர் 2 ஆம் தேதி லவ் டுடே படம் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மோனிஷா
“என் ஹீரோ மெஸ்ஸி தான்” கேரளா டூ கத்தார் சென்ற பெண்!
மது வாங்க ஆதார்… திமுகவுக்கு செலக்ட்டிவ் அம்னீசியாவா?: கமல் கட்சி கேள்வி!