பிரபல சினிமா கலைஞர்களின் திருமண நிகழ்வுகளைத் தொலைக்காட்சி, ஓடிடி தளங்கள் விலைக்கு வாங்குவதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
நடிகை ஹன்சிகாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர் தனது நீண்ட நாள் காதலனான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா என்கிற 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.
சோஹைலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. ஹன்சிகாவின் தோழியை தான் அவர் முதலில் திருமணம் செய்துகொண்டார்.
அவர்களது திருமணத்திலும் ஹன்சிகா கலந்துகொண்டிருந்தார். இதையடுத்து விவாகரத்து ஆன பின்னர் ஹன்சிகாவுக்கும் சோஹைலுக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
இவர்களது திருமண வீடியோவை லவ் ஷாதி டிராமா என்கிற பெயரில் டாக்குமெண்ட்ரியாக தயாரித்து ஹாட்ஸ்டார் தளத்தில் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இந்த டாக்குமெண்ட்ரியின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் நடிகர் சிலம்பரசன் உடனான காதல் முறிவு குறித்து மனந்திறந்து பேசி உள்ளார் ஹன்சிகா.
அதில் அவர் “நான் ஏற்கனவே ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தது அனைவருக்கும் தெரியும். அதை மீண்டும் செய்ய வேண்டாம் என நினைத்தேன், ஆனால் எதிர்பாராமல் அது நடந்துவிட்டது.
இந்த முறை ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் அது திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், திருமணத்துக்கு முன் 19 நாட்கள் எரிமலை போன்று கொந்தளிப்பான மனநிலையில் தான் இருந்தேன். ஒரு பேப்பரும், பேனாவும் இருந்தால் போதும் அடுத்தவரின் வாழ்க்கையை நாசமாக்கிவிட முடியும் என நம்புகிறார்கள்” என எமோஷனலாக பேசி கண்கலங்கி உள்ளார் ஹன்சிகா.
வாலு படத்தில் நடித்தபோது சிலம்பரசனுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்தது. பின்னர் இருவருமே தங்களது காதல் குறித்து ஓப்பனாக பேசியபோது, ஹன்சிகாவின் குடும்பம் இந்த காதலுக்கு சம்மதிக்கவில்லை. நாளடைவில் அந்த காதல் முறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
அனுமதியின்றி அதிமுக கூட்டம்: தேர்தல் அதிகாரிகளின் அதிரடியால் ஈரோட்டில் பரபரப்பு!
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்!