ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில், அவர்குறித்து அவரது மகள் ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை இன்று (பிப்ரவரி 21 ) வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றிருந்த போது அங்கு குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு மரணமடைந்தார்.
அவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
தாயின் மரணத்திற்கு பின்னர் ஜான்வி கபூர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி பாலிவுட்டில் தடக், கோஸ்ட் ஸ்டோரீஸ், குட்லக் ஜெர்ரி, மில்லி போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி என்கிற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது தாயின் நினைவு தினம் இன்னும் சில தினங்களில் வர உள்ளதாக, அவர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ”நான் இன்னும் எல்லா இடங்களிலும் உன்னைத் தேடுகிறேன் அம்மா. உன்னை பெருமைப்படுத்தும் விதமாக நான் எல்லாவற்றையும் செய்வதாக நம்புகிறேன்.
நான் எங்கே சென்றாலும், என்னென்ன செய்தாலும் அது உன்னில் தான் ஆரம்பித்து முடிகிறது” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் ஸ்ரீதேவியின் கணவரும் , தயாரிப்பாளருமான போனி கபூர் வெளியிட்டுள்ள பதிவில் “ 5 வருடங்களுக்கு முன் எங்களை விட்டு பிரிந்து சென்றாய்….. உனது அன்பும் நினைவுகளும் எங்களை தொடரும், என்றும் எங்களுடன் இருக்கும்”. என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மக்கள் நீதி மய்யம் 6-ஆம் ஆண்டு துவக்க விழா!
டீன் ஏஜ் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை!
வீரர்களை ஆதரிச்சா பதவி கிடைக்குமா? கே.எல்.ராகுலுக்கு ஆதரவாய் ஆகாஷ் சோப்ரா