லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், பகத் பாசிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் “பென்ஸ்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்னதாக “பைட் கிளப்” என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது அவர் தயாரிக்கும் “பென்ஸ்” படத்தை ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
“பென்ஸ்” படத்தை முதலில் லோகேஷ் கனகராஜின் நண்பரான ரத்னகுமார்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், லியோ பட மேடையில் ரஜினியை பற்றி அவர் பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால் ராகவா லாரன்ஸ் ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டதாக தகவல் வெளியானது. பிறகு இயக்குநர் மாற்றம் நடந்தது.
தற்போது இந்த படம் குறித்த புது அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, “பென்ஸ்” படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து மற்றொரு வில்லனாக பகத் பாசிலும் நடிக்கிறாராம்.
ஏற்கனவே, “ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்” படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருந்தார். பகத் பாசில், ராகவா லாரன்ஸ் உடன் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.
வில்லத்தனத்தில் மிரட்டி வரும் எஸ்.ஜே.சூர்யாவும், பகத் பாசிலும் ஒன்றாக இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராகுல், கோலி, ரோஹித்… இந்திய அணியிடம் போனில் பேசிய மோடி
மதுவில் கிக் இல்லை… துரைமுருகனின் பேச்சு தமிழகத்துக்கு தலைகுனிவு : பிரேமலதா