இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ. லியோ படத்தின் போஸ்டர், பாடல், ஆடியோ லான்ச், டிரெய்லர் என ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் போதும் ஏதோ ஒரு பிரச்சனை கிளம்பிவிடுகிறது.
இதெல்லாம் இருந்தாலும், அனைத்தையும் தாண்டி லியோ பட ப்ரோமோஷன்களில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி உள்ளது படக் குழு. லியோ பட ப்ரோமோஷன்களுக்காக பல சேனல்களுக்கு தொடர்ந்து இன்டர்வியூ கொடுத்து வந்தார் இயக்குனர் லோகேஷ்.
*தளபதியின் லியோ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மலைப்பாதை வழியாக சென்ற இயக்குனர் லோகேஷ்கனகராஜ்* 🙏🙏🙏 pic.twitter.com/9c94wKUREn
— TP MANIKANDAN (@MANIKAN28579622) October 11, 2023
அந்த இன்டர்வியூகளில் படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து விட்டார்.
மேலும் நேற்று (அக்.11 ஆம் தேதி) லியோ படத்தின் மூன்றாவது பாடலான “அன்பெனும்” என்ற மெலடி பாடலையும் படக் குழு வெளியிட்டது.
நா ரெடி, Badass ஆகிய இரண்டு பாடல்களும் செம மாஸாக இருந்த நிலையில், அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு குடும்ப பாடலாக “அன்பெனும்” பாடல் அமைந்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ப்ரோமோஷன் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு, லியோ படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
லோகேஷ், கீழ் திருப்பதியில் இருந்து நடந்து மேல் திருப்பதிக்கு செல்லும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் இயக்குனர் லோகேஷுடன், இயக்குனர் ரத்ன குமார் மற்றும் லியோ படக்குழுவினர் உள்ளனர்.
இயக்குனர் ரத்ன குமார் வீடியோ எடுத்துக் கொண்டே “கோவிந்தா, கோவிந்தா” என முழங்க உடன் வருபவர்களும் “கோவிந்தா, கோவிந்தா” என்று முழங்கி கொண்டே நடந்து சென்றனர்.
லியோ படம் வெற்றி பெற வேண்டி லோகேஷ் திருப்பதி சென்றது போலவே, மாஸ்டர் படம் ரிலீசுக்கு முன்பு லோகேஷ், அனிருத், ரத்ன குமார் ஆகியோர் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த திருப்பதி பயணத்தில் அனிருத் மட்டும் மிஸ்ஸிங்..
– கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!