வெற்றிமாறனை இயக்க ஆசை : லோகேஷ் கனகராஜ்

சினிமா

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகி 12 நாட்களில் 540 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

லியோ படத்தின் இந்த  வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று (நவம்பர் 1 ) சென்னை உள் விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

நடிகர் விஜய் உட்பட லியோ படத்தில் பணியாற்றிய நடிகர்கள் அனைவருமே இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில், மேடையில் இயக்குனர் ரத்ன குமார் பேசியது நடிகர் ரஜினியை சீண்டும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகைத்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் லியோ படம் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் விழா மேடையில் பேசினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

கேள்வி : வேறு எந்த இயக்குனரை உங்கள் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்..?

லோகேஷ் பதில் :

“வெற்றிமாறன்… ஏற்கனவே அவரை என் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் அது கைகூடவில்லை”.

லியோ படத்திற்கு தங்களுக்கு என்ன கிஃப்ட் கிடைக்கும்? 

“என்னுடைய கிஃப்ட் பற்றி தயாரிப்பாளரிடம் கேட்டேன். ஹெலிகாப்டருக்கு பெயிண்ட் அடிச்சுக்கிட்டு இருக்காங்க என்று சொன்னார்” என நகைச்சுவையாக பதில் அளித்தார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் உதவித்தொகை!

விஜய்யா இருப்பது கஷ்டமா? ஈசியா?: அர்ஜுனின் கேள்வி!

நெல்லையில் கொடூரம்: பட்டியலின இளைஞர்கள் தாக்கிய 6 பேர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0