நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி யூடியூபையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.
லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினாலும், ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள கெட்ட வார்த்தை, ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள், புகைபிடிக்கும் காட்சிகள் போன்றவை சிலருக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை அடுத்து நடிகர் விஜய்யையும், இயக்குனர் லோகேஷ் கனகராஜையும் கண்டித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா, லியோ ட்ரெய்லர் குறித்தும் லோகேஷ் கனகராஜ் குறித்தும் சர்ச்சையை கிளப்பும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.
சினிமாவில் தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அடுத்த தலைமுறை கையில் அருவாளையும், ரத்த சிதறலை நக்கிப் பார்க்கும் சைக்கோ புத்தியையும் கொடுப்பதாகவே அவரது காட்சி அமைப்புகள் இருக்கின்றன.
லோகேஷ் மீது அன்பு கொண்டவர்கள் அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
— Cartoonist Bala (@cartoonistbala) October 5, 2023
அவர் பதிவில், சினிமாவில் தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்த தலைமுறை கையில் அருவாளையும், ரத்த சிதறலை நக்கிப் பார்க்கும் சைக்கோ புத்தியையும் கொடுப்பதாகவே அவரது காட்சி அமைப்புகள் இருக்கின்றன. லோகேஷ் மீது அன்பு கொண்டவர்கள் அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும் என்று கார்ட்டூனிஸ்ட் பாலா தெரிவித்திருக்கிறார்.
கார்ட்டூனிஸ்ட் பாலாவின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கோதுமை தோசை
உண்மை தான்..தமிழ் சினிமா தற்போது ரத்தங்களின் ஊடாக மட்டுமே வாழ்கிறது.