லியோ படத்தில் தான் செய்த தவறை இனிமேல் செய்ய மாட்டேன் என, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 19-ம் தேதி விஜய், திரிஷா உட்பட ஏராளமான முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் லியோ. அனிருத் இசையில் வெளியான இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்திருந்தது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக விஜய் நன்றாக நடித்திருந்தாலும் கூட, படத்தின் 2-ம் பாதி கனெக்ட் ஆகவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதுகுறித்த உண்மையை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில்,” படத்தின் பூஜையன்றே வெளியீட்டு தேதியை அறிவித்தது தவறு.
ரிலீஸ் தேதி நெருங்கி விட்டது என்ற பதட்டம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும். இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன். லியோ ரிலீஸ் தேதி நான் கேட்டு வாங்கியது தான் என்றாலும், போதுமான நேரம் கிடைக்கவில்லை.
பெரிய படங்களை பொறுத்தவரை வேகம் தேவையில்லை. நிதானம் தான் தேவை.” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லோகேஷ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171-வது படத்தினை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
பிரபுவின் மகளை கரம்பிடித்தார் ’மார்க் ஆண்டனி’ இயக்குநர்
சச்சினைத் தொடர்ந்து தோனிக்கு பெருமை செய்த பிசிசிஐ : ரசிகர்கள் ஹேப்பி!