lokesh kanagaraj directiong rajinikanth

ரஜினிகாந்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்

சினிமா

நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியானது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப்,ஷிவ ராஜ்குமார், மோகன்லால், சுனில், விநாயகன், வசந்த்ரவி,யோகி பாபு, மிர்னா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயிலர் வெளியாகி ஒரு மாதங்களை கடந்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். அதன்படி ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெயிலர் படத்தில் அனிருத்தின் இசை நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. லியோ பட வெளியீட்டிற்குப் பிறகு ரஜினிகாந்த் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோனிஷா

செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு ஜாமின்: உயர்நீதிமன்ற கிளை புது உத்தரவு!

’மறக்குமா நெஞ்சம்’: சிக்கிய சி.எம். கான்வாய்…தாம்பரம் போலீஸ் நடவடிக்கை!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *