லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்: அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

சினிமா

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளான இன்று (மார்ச் 14 ) ‘லியோ‘ படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளன்று விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக இருந்து வந்த லோகேஷ் கடந்த ஓராண்டில் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

அதற்கு முக்கிய காரணம் விக்ரம் திரைப்படம். நடிகர் கமல்ஹாசனின் ரசிகரான லோகேஷ் ‘விக்ரம்’ படத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கியிருந்தார்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தனர்.

ஆனால் லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். இவர்களின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்‘ திரைப்படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் அம்சங்களை சேர்ந்திருந்த லோகேஷ் இம்முறை ‘லியோ’ படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் உருவாக்கி வருகின்றார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தை வேகமாக முடித்துவிட்டு அக்டோபர் மாதம் படத்தை திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (மார்ச் 14 ) இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் என்பதால் ’லியோ’ படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வருமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே லோகேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஏதேனும் போஸ்டர் வெளியானால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பங்கை கரெக்ட்டா பிரிக்கணும்… அஸ்வின் – ஜடேஜாவின் வைரல் ரீல்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0