லோகேஷ் கனகராஜ் பெயரில் பண மோசடி!

சினிமா

தெலுங்கு சினிமாவில் பல குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரம்மாஜி. இவர் தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நடிகர் பிரம்மாஜி தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரை பயன்படுத்தி பண மோசடி நடந்துவருவதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பதிவில், “ஒரு போன் நம்பரை குறிப்பிட்டு, இந்த நம்பரை பயன்படுத்தும் நபரின் பெயர் நட்ராஜ் அண்ணாதுரை இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மேனேஜர் எனக் கூறிக்கொண்டு, பல இளம் நடிகர்களிடம் நீங்கள் லோகேஷின் அடுத்த படத்திற்கு தேர்வாகியுள்ளீர்கள். அந்த ஆடிஷனுக்கான காஸ்டியூம் வாடகை பணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். ஆடிஷன் முடிந்த பிறகு அந்த வாடகை பணம் திருப்பி தரப்படும்” என்று புதுவிதமான பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக நடிகர் பிரம்மாஜி கூறியிருக்கிறார்.

மேலும் இந்த நடராஜ் அண்ணாதுரை போலவே இன்னொரு போன் நம்பரை குறிப்பிட்டு இவர் பெயர் சத்யதேவ் தமிழ்நாட்டிலிருந்து பேசுவதாக கூறி, வளர்ந்து வரும் நடிகர்களை குறி வைத்து பணமோசடியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் பதிவிட்டிருக்கிறார்.

ஏற்கனவே லியோ ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கும் கெட்ட வார்த்தை, ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் என லோகேஷ் கனகராஜுக்கு எதிராக ஒரு சில பேர் கருப்பு கொடி தூக்கி இருக்கும் நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் பெயரில் நடக்கும் இந்த பண மோசடியினாலும் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் லோகேஷ். லியோ படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு சர்ச்சைகள் என்றால் வெளியான பின் என்னென்ன நடக்கப் போகிறதோ…

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பராமரிப்பு பணி: நாளை 44 ரயில்கள் ரத்து!

டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *