அர்ஜூனுக்கு வாட்ச் பரிசளித்த லோகேஷ்..!?

சினிமா

நடிகர் விஜய் நடிப்பில் வரும் அக். 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ. லியோ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கிறார். லியோ படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் லியோ படத்திற்கான டிக்கெட் விற்பனைகள் அதிவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் லியோ பட ப்ரோமோஷன்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்து வரும் இன்டர்வியூகளில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

லியோ படத்தின் முதல் 10 நிமிட காட்சியை தவறாமல் பார்த்து விடுங்கள், 150 அடியாட்களுடன் நடிகர் விஜய் மோதும் காட்சி, ஹைனா உடன் நடிகர் விஜய் சண்டையிடும் காட்சி, ஆறு நிமிடங்கள் சிங்கிள் டேக் காட்சி உள்ளிட்ட பல அப்டேட்களை லோகேஷ் கூறியிருந்தார்.

இதேபோல் சமீபத்தில் லோகேஷ் அளித்த ஒரு பேட்டியில் லியோ படத்தின் கடைசி 35 நிமிட காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் அர்ஜூன் உடன் நடிகர் விஜய் மோதும் காட்சிகளும் செம ஆக்சனாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அர்ஜூனுக்கு ஒரு வாட்ச் பரிசளித்ததாக சினிமா வட்டாரங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

லியோ படத்தின் இறுதி காட்சியில் நடிகர் அர்ஜூனின் மிரட்டலான ஆக்சன்களை பார்த்து லோகேஷ் அசந்து விட்டாராம். அர்ஜூனின் அந்த மிரட்டலான நடிப்புக்காக லோகேஷ் கனகராஜ் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வாட்ச்சை நடிகர் அர்ஜூனுக்கு பரிசாக வழங்கியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்று சரியாக தெரியவில்லை.

மேலும் லோகேஷ் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்க இருக்கும் தலைவர் 171 படத்திலும் நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

குலசை தசரா திருவிழா கோலாகலமாக துவங்கியது!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0