Lok Sabha Election 2024: வெள்ளை நிற ஆடையில் வந்த பிரபலங்கள்… என்ன காரணம்?

சினிமா

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தமிழ்நாடு முழுவதும், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவில் தமிழ்நாடு முழுவதும் இளம் வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

மதியம் 1 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 40% அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. நடிகர்களை பொறுத்தவரை காலை முதல் ஆளாக நடிகர் அஜித் வாக்களித்தார்.

தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பரத், சித்தார்த், நகுல், யோகிபாபு ஆகியோர் வாக்களித்தனர்.

நடிகைகள் திரிஷா, ஆண்ட்ரியா, அதிதி பாலன் ஆகியோரும் தங்களது வாக்கினை அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவு செய்தனர்.

இசையமைப்பாளர்கள் அனிருத், ஜிவி பிரகாஷ் இயக்குநர்கள் ஹரி, வெற்றிமாறன், அமீர், ரஞ்சித், ஷங்கர் என, பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் பெரும்பாலான பிரபலங்கள் வெள்ளை நிற ஆடையில் வந்து வாக்களித்தது, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

திரைத்துறையில் இருந்து நடிகர் அஜித் முதல் நபராக வெள்ளை சட்டையில் வந்து வாக்களித்தார். தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த், பரத், பிரசன்னா ஆகியோர் வெள்ளை உடையில் வந்து வாக்களித்து உள்ளனர்.

இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், ரஞ்சித், செல்வராகவன் என இயக்குநர்களும் வெள்ளை ஆடையில் வந்து வாக்களித்து இருக்கின்றனர். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் அனைவருமே வெள்ளை உடையில் வந்து வாக்களித்து உள்ளனர்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர்கள் அணிந்து வந்த ஆடை நிறங்களை வைத்து அவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. எனவே இதுபோன்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு வெள்ளை உடையில் வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

18 தொகுதிகளில் கைவிரித்த திமுக…புகுந்து விளையாடிய அதிமுக…ஒதுங்கிய பாஜக…கள பண நிலவரம்!

ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்த… ‘கேப்டன் அமெரிக்கா’ ஆக்ஷன் இயக்குநர்!

ஊழியர்களை நீக்கியது கூகுள்… ஏன் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *