paiya 2 movie

லிங்குசாமி இயக்கும் பையா 2: ஆனா ஹீரோ கார்த்தி இல்ல!

சினிமா

2010 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் நடித்திருந்த கார்த்திக்கு ஒரு சாக்லேட் பாய் இமேஜை உருவாக்கி கொடுத்த படம் பையா. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட்.

பையா படத்திற்கு பின் லிங்குசாமி இயக்கிய வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி பையா 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். ஆனால் இந்த படத்தில் கார்த்தி நடிக்க போவதில்லை என்றும் கூறப்படுகிறது.

பையா 2 படத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

சின்னத்திரை நடிகையை கரம் பிடித்த ரெடின் கிங்ஸ்லி… பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!

மழை பாதிப்பு: நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *