HBD அனிருத் : எல்.ஐ.கே. படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்.ஐ.கே’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘தீமா’ என்கிற பாடல் அப்படக்குழுவால் இன்று (அக்டோபர் 16) வெளியிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் இசையமைத்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘தீமா’ என்கிற பாடல் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவனே எழுதியுள்ளார்.
நடிகை நயன்தாரா மற்றும் செவென் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘லவ் இன்சுரன்ஸ் கம்பெனி ( எல்.ஐ.கே) இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, ‘நாம் தமிழர் கட்சி’ தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யோகி பாபு, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, மாளவிகா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இளமை துள்ளும் ரோம்காம் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
சென்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் :ஸ்டாலின் உறுதி!
சாம்சங் போராட்டம் முடிவு… பணிக்குத் திரும்பும் தொழிலாளர்கள்: சிஐடியு அறிவிப்பு!