நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இந்திய சினிமாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு தொழில்நுட்பங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன்.
அதன் பின்னரே பிற மொழி சினிமா துறையினர் அதனை பயன்படுத்த தொடங்குவார்கள். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பன்முக தன்மை கொண்ட கமல்ஹாசனுக்கு விருதுகள் என்பது சாதாரணமான ஒன்றாகி விட்ட நிலையில், சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சர்வதேச இந்திய திரைப்பட(IIFA) அகாடமி விருது 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 23வது விருது வழங்கும் விழா மே 26, 27 ஆகிய இரு நாட்கள் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் இருவரும் தொகுத்து வழங்குகின்றனர். இதில் சல்மான் கான், ஹிரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்திய திரைத்துறைக்கு அவரது மிகச்சிறந்த பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருதை வழங்குவதாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி தெரிவித்துள்ளது.
இராமானுஜம்