’லைசென்ஸ்’ படத்தில் பிரபல பாடகி ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
நார்மல் பிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தயாரிக்கும் படம் ‘லைசென்ஸ்’. உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமான மக்கள் இசை பாடகியான ராஜலட்சுமி செந்தில் இந்த ‘லைசென்ஸ்’ படம் மூலம் திரைப்படத்தில் கதைநாயகியாக அறிமுகமாகிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான ராஜலட்சுமி – செந்தில் தம்பதியினர் திரைப்படங்களில் பாடியதன் மூலம் சர்வதேச தமிழர்களிடம் பிரபலமானார்கள்.
குறிப்பாக ‘என்ன மச்சான்’ மற்றும் ‘புஷ்பா‘ படத்தில் ‘சாமி என் சாமி’ ஆகிய பாடல்கள் இவர்களை கிராமங்கள் வரை கொண்டுபோய்ச் சேர்த்தது. தந்தை – மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசக் கூடிய திரைக்கதையை எழுதி இயக்குகிறார் கணபதி பாலமுருகன்.
இவர் கவுண்டமணி கதை நாயகனாக நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார்.
மேலும் இதில் மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பை, இன்று (நவம்பர் 9) காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழு அறிவித்தது.
இராமானுஜம்
ரூ. 10 கோடி: சமாதானமான வாத்தி தனுஷ்
‘கைதிகள்’ கதைக்காக போட்டிபோட்ட இயக்குநர்கள்!
தூ