தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின் டீசர் நேற்று (ஜூன் 7) வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தற்போது சினிமா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை துவங்கினர்.
தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக எல்ஜிஎம் (Let’s Get Married )திரைப்படத்தை தமிழ் மணி இயக்குகிறார்.
இப்படத்தில் நடிகராக ஹரிஷ் கல்யாண், நடிகையாக இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தநிலையில் எல்ஜிஎம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பொழுதுபோக்கு காதல் திரைப்படமாக எல்ஜிஎம் உருவாகியிருப்பது டீசரை பார்க்கும்போது தெரியவருகிறது.
டீசரில் ஹரிஷ் கல்யான், இவானா, நதியா, வெங்கட்பிரபு, விடிவி கணேஷ், யோகி பாபு, மிர்ச்சி சிவா என ஒரு பெரிய பட்டாளமே வருகிறார்கள். கதாபாத்திர அறிமுகமாகவே டீசர் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செல்வம்
அஸ்வின் இல்லாத ஆடும் லெவன்: ரோகித் விளக்கம்!
டிஜிட்டல் திண்ணை: மாணவர்கள் வழியாக மாண்புமிகு! 2031 ஐ நோக்கி விஜய்யின் வேட்டை திட்டம்!