சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்றான கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் லியோ படம் ரிலீஸ் ஆகாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில் படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அதிகாலை சிறப்பு காட்சி, தியேட்டர் உரிமையாளர்கள் – விநியோகஸ்தர்கள் இடையேயான பேச்சுவார்த்தை முரண்பாடு, டைட்டில் பிரச்சனை என ஏகப்பட்ட பிரச்சனைகளில் லியோ சிக்கி உள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய தியேட்டர்களான ரோகிணி, கமலா, வெற்றி, சங்கம், தேவி, ஈகா, தேவி உள்ளிட்டவற்றில் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக இந்த தியேட்டர்களின் வாயில்களில் லியோ படத்திற்கான முதல் நாள் டிக்கெட் பெறுவதற்காக ரசிகர்கள் காத்திருக்கும் காட்சிகளை காண முடிகிறது.
இந்த நிலையில், சென்னையில் ரசிகர்களின் கோட்டையாக உள்ள கோயம்பேடு ரோகிணி தியேட்டர் வாயிலில் ’லியோ திரைப்படம் இங்கு திரையிடப்படாது’ என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விஜய் படம் வெளியாகும்போதும் ரோகிணி தியேட்டரில் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
படத்திற்கான ஷேர் பிரச்சனையில் தியேட்டர் உரிமையாளர்கள் – விநியோகஸ்தர்கள் இடையே உடன்பாடு ஏற்படாததே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
லியோ படத்திற்கு இன்னும் ஒருநாளே உள்ள நிலையில் இன்று மாலைக்குள் சென்னையின் பிரபல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்பட வேண்டும். இல்லையென்றால், அது லியோ படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும்.
அதேவேளையில் நாளை வெளியாகும் லியோ படத்தின் வரவேற்பை வைத்து, சென்னை தியேட்டர்களில் படத்திற்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காசா மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல்: மறுக்கும் இஸ்ரேல்!
தமன்னாவின் முதல் மலையாள படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் கைது!