7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில், நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் லியோ.
லியோ படத்தின் போஸ்டர்களும், பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி லியோ படத்தில் நடித்துள்ள நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகிய இருவர்களுக்குமே தனி தனியாக Glimpses வீடியோக்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் இடையே அதிகரித்தது.
Unveiling the most-awaited look of @trishtrashers 💥#LeoTrailer is releasing today 💥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SunTV @SonyMusicSouth #Leo#LeoTrailerFromToday pic.twitter.com/oe15rahOw5
— Seven Screen Studio (@7screenstudio) October 5, 2023
லியோ படத்தின் ப்ரோமோஷன்கள் தொடங்கியதில் இருந்தே விஜய், சஞ்சய் தத், மற்றும் அர்ஜுன் ஆகிய 3 பேர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், மற்ற நடிகர்கள் குறித்த தகவல்களோ, போஸ்டர்களோ, வெளியிடப்படாமலே இருந்தது.
இந்நிலையில், இன்று அக்.5 ஆம் தேதி லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, நடிகை திரிஷாவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரத்தம் தெறிக்க, பயந்த ரியாக்ஷனுடன் திரிஷா நிற்பது போல் வெளியாகி உள்ள போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது: எடப்பாடி கண்டனம்!
ODI World Cup 2023: மூன்றாவது முறையாக சாதிக்குமா இந்தியா?