leo uncut version going to release

லியோ “UNCUT VERSION” ரிலீஸ்!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம், 12 நாட்களில் 540 கோடி ரூாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

வெளியாவதற்கு முன்பிருந்தே பல சிக்கல்களை லியோ படம் சந்தித்தது. லியோ படத்தில் வன்முறை காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளதை குறிப்பிட்டுக்காட்டி பலரும் விமர்சித்து வந்தனர். சென்சார் போர்டு தரப்பில் லியோ படத்திற்கு 13 கட்டுகள் கொடுக்கப்பட்டது.

லியோ படத்தின் “நா ரெடி தான்” பாடல் படம் வெளியாவதற்கு முன்பே செம ஹிட் என்பதால், திரையில் பாடலை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் திரைப்படத்தில் “நா ரெடி தான்” பாடல் வரிகள் நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில், லியோ படத்தின் அன்கட் வெர்ஷன் ரிலீஸாக போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் நாட்டில் லியோ படத்தை அஹிம்சா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது. அஹிம்சா என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் அறிவிப்பின்படி லியோ படம் பிரிட்டன் மற்றும் யூரோப்பை சேர்த்து மொத்தம் 35 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது.

இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க லியோ படத்தின் அன்கட் வெர்ஷனை வெளியிட போவதாக அஹிம்சா என்டர்டைன்மெண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

வரும் நவம்பர் 3 ஆம் தேதி லியோ படத்தின் அன்கட் வெர்ஷன் பிரிட்டனில் உள்ள சினி வேர்ல்ட் சினிமாஸில் வெளியாகும், லியோ படத்திற்கு எந்த கட்டுகளும் கொடுக்க படவில்லை, 18+ சான்றிதழோடு பிரிட்டனில் வெளியாகும் முதல் தமிழ் படம் லியோ தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

சியான் 63 படத்தின் இயக்குனர் இவரா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts