leo trailer date announced

ஒரே நாளில் வெளியான இரண்டு அப்டேட்… விஜய் ரசிகர்கள் குஷி!

சினிமா

‘லியோ’ படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி குறித்த தகவலை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இன்று(அக்டோபர் 2) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் – அனிருத் – லலித்குமார் ஆகியோர் அடங்கிய கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘லியோ’.

அறிவித்த நாள் முதல் இந்திய அளவில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையே படத்தில் இடம்பெறும் நா ரெடி மற்றும் படாஸ் பாடல்களின் லிரிக் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் இணையத்தில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

டிரெய்லர் ரிலீஸ் தேதி!

தொடர்ந்து லியோ படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று ஆனந்த அதிர்ச்சி அளித்துள்ளது படத்தை தயாரிக்கும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

‘லியோ’ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5-ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை நடிகர் விஜயும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இன்றைய அறிவிப்பில் டிரெய்லர் எத்தனை மணிக்கு வெளியாகும் என்ற தகவல் இடம்பெறவில்லை. அதுகுறித்த தகவல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ‘லியோ‘ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதால், கடும் அப்சட்டில் இருந்த விஜய் ரசிகர்களுக்காக  லியோ’ படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை அள்ளி வீசி குஷிபடுத்தி வருகிறது.

தளபதி 68 பட பூஜை!

இதற்கிடையே இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 68’ படத்தின் பூஜை இன்று பிரசாத் லேபில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் ‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் வெளியாகும் என படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘இரண்டு நாளில் அறிவிக்க வேண்டும், இல்லையேல்…’ ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!

உதயநிதிக்காக போராடிய திமுக ஒன்றிய செயலாளர் மீது வன்கொடுமை வழக்கு!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *