லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிகோரிய மனு மீதான விசாரணை நாளை(அக்டோபர் 17) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் லியோ படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து புதிய அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
அதில், லியோ பட சிறப்புக் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என்றும், இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இது ரசிகர்கள் மற்றும் படக்குழு மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதியளிக்கக் கோரியும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், ”அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
ஏற்கனவே, அதிகாலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.
மேலும் லியோ பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கு நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குழந்தை விற்பனை… பெண் மருத்துவர் சஸ்பெண்ட்!
மிக கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில்?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!