லியோ படத்தில் ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் புதியவகை கேமராக்கள் குறித்த ஒரு வீடியோவை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் லியோ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் 2வது முறையாக இணைந்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
லியோ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜனவரி மாத இறுதியில் படக்குழு காஷ்மீர் சென்றது. தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் லியோ படத்தின் படப்பிடிப்பிற்காக “red v raptor xl” என உயரிய தொழில்நுட்பங்கள் அடங்கிய கேமரா வரவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது குறித்து, வையர்லெஸ் டைம்கோடு, ஜென்லாக், பேஸ் ஷிப்ட்ஸ் உடன் மற்றும் பல ரெட் கேமராக்களுடன் இணைந்து விர்சுவல் புரடக்ஷனுக்கு தயாராக உள்ளது. லியோ போருக்குத் தயாராக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
மோனிஷா
போக்சோவில் கைதான அதிமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்!
ஆடம்பரங்களைத் தவிர்க்கவும்: உதயநிதி ஸ்டாலின்