Leo second single glimbs make vibes in mid night

Leo Das is a “BADASS” – சர்ப்ரைஸ் மாஸ் ப்ரோமோ!!

“லியோ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்தானதால் நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க முடியாமல் போன சோகத்தில் தங்களது வருத்தங்களை சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களை குஷி படுத்த லியோ படத்தின் செகண்ட் சிங்கிளான “BADASS” பாடல் செப்.28 ஆம் தேதி (இன்று) வெளியாகும் என 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் X பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் ரசிகர்களை மேலும் Vibe-ஆக்க BADASS பாடலுக்கான ஷார்ட் ப்ரோமோ நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என லியோ படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஷ் திடீரென தனது X பக்கத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் செகண்ட் சிங்கிளுக்கான எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு வெளியான BADASS பாடல் ஷார்ட் ப்ரோமோவில் “Badass…Mr.Leo Das is a Badass” என்ற வரி இடம்பெற்றுள்ளது. BADASS பாடல் வரிகளை விஷ்ணு இடவன் எழுதியுள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு லிரிக் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் வெளியான “நா ரெடி” பாடல் வெறித்தனமான ஹிட் அடித்திருக்கும் நிலையில் இந்த செகண்ட் சிங்கிளான BADASS பாடலும் செம ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி

”இருக்கப்போவது கொஞ்ச காலம்… ஏன் இப்படி?”: நித்யா மேனன் வேதனை!

தமிழக எம்.பி.க்களுக்கு என்னாச்சு?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts