இன்ஸ்டாகிராமில் லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் 32 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குகளை பெற்று புஷ்பா 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்த படம் லியோ. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெற்றி அடைந்ததால் லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லியோ பட டைட்டில் அறிமுகம், போஸ்டர்கள், நான் ரெடி தான் பாடல் வெளியாகி ஹிட் அடித்தன. இந்த பாடலில் போதை பொருள் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதாக சர்ச்சைகள் எழுந்தது. இதன் காரணமாக பாடலின் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளது. லியோ அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தநிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.
அதன்படி லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் எதோ ஆழ்ந்து சிந்திப்பது போன்று உள்ளது. அவரது சட்டையில் பொறுமையாக இரு…சண்டையை தவிர்ப்போம் என்ற வாசகங்கள் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் மிக வேகமாக 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற போஸ்டர் என்ற சாதனையை லியோ படைத்துள்ளது. லியோ போஸ்டர் வெளியான 32 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்குகளை பெற்றது.
முன்னதாக அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 போஸ்டர் 33 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றிருந்தது. இதன்மூலம் புஷ்பா 2 சாதனையை லியோ பின்னுக்கு தள்ளியுள்ளது.
செல்வம்
முப்பெரும் விழாவில் துரைமுருகன் பற்றி உருகிய ஸ்டாலின்
சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!