லியோ இசை வெளியீடு: விஜய்யின் திட்டம் என்ன?

சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில்  நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இரண்டு மாதங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளது. விஜய் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை  மதுரை அல்லது திருச்சியில் நடத்தலாமா என படக்குழு தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து கொண்டிருக்கிறது விஜய் தரப்பு.

அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலையின் பிறந்த நாட்களில் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்குமாறு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கேட்டுக் கொண்ட விஜய் அவர் எந்த இடத்திலும் அம்பேத்கர், தீரன் சின்னமலை சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை.

சென்னையில் நடைபெற்ற விஜய் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க குறிப்பிட்ட அளவிலான அனுமதி சீட்டுகள் அவரது ரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் தொலைதூரத்தில் உள்ள தென்மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த அனுமதி சீட்டு வழங்குவதற்கு குறிப்பிட்ட தொகையை நிர்வாகிகள் வசூலிப்பதாக குற்றசாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில். தென்மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர்களை ஒருங்கிணைந்து உற்சாகப்படுத்தவும், தனது பலத்தை பொது வெளியில் காட்டவும் விஜய் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடத்தினால் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும். அரசியல் ரீதியான கவனத்திற்கு உள்ளாக வேண்டும். இவற்றை தவிர்க்க”லியோ” படத்தின் இசை வெளியீட்டு விழாவை திருச்சி அல்லது மதுரையில் நடத்தினால் அதற்கான செலவை தயாரிப்பாளரே செய்து விடுவார்.

சென்னையில் சினிமா பிரபலங்கள் பங்கேற்பது போன்று வெளியில் நடக்கும் இசை வெளியீட்டு விழாவிற்கு வரமாட்டார்கள். அதனால் முழுமையாக இசை வெளியீட்டு விழா என்பதன் பெயரால் தனது விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்கும் மாநாடாக நடத்திவிட விஜய் தரப்பு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தனியார் வலைதள நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை தவிர்த்து தென் மாவட்டத்தில் நடத்தும் ஐடியா இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

12 மணி நேர வேலை: கலைஞர் சொன்னதை மீறிய ஸ்டாலின்

12 மணி நேர வேலைச் சட்டம்: தனி மனித வாழ்க்கையில் ஆடும் ஆட்டம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *