லியோ: விஜய் ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த அப்டேட்!

சினிமா

லியோ படத்தில் விஜய் தொடர்பான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. லியோ திரைப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனேன் என பெரிய பட்டாளமே நடிக்கின்றனர். இதனால் லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும் அதனை தொடர்ந்து ஆந்திரா சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது.

leo movie vijay portion wrapped

அண்மையில் லியோ படத்தின் போஸ்டர் மற்றும் நா ரெடி பாடல் வெளியானது. இதில் நா ரெடி பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற அதேவேளையில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

leo movie vijay portion wrapped

இந்தநிலையில் லியோ படத்தில் விஜய் தொடர்பான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “லியோ திரைப்படத்தில் விஜய் தொடர்பான காட்சிகள் நிறைவடைந்துவிட்டது. இரண்டாவது பயணத்தை மீண்டும்  சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி விஜய் அண்ணா” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

அவதூறு வீடியோ: கனல் கண்ணன் கைது!

“காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்” – எடப்பாடி வலியுறுத்தல்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *