லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்ததாக படக்குழு நேற்று (அக்டோபர் 31) அறிவிப்பு வெளியிட்டது.
இந்தநிலையில் லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (நவம்பர் 1) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 6000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் வெற்றி விழாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் பேசும் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இன்று மதியம் முதலே நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு ரசிகர்கள் வர தொடங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரசிகர் மன்ற அட்டை, ஆதார் அட்டை, வெற்றி விழாவுக்கான பாஸ் போன்றவை இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
ரசிகர்கள் கொண்டு வரும் பாதாகைகளை சாலையோரம் வைக்க கூடாது, பட்டாசு வெடிக்க கூடாது, பேரணியாகவோ கும்பலாகவோ வரக்கூடாது, குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்: டிஜிபி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
அனுமதியின்றி கொடி ஏற்ற முயன்ற பாஜகவினர் கைது!