விஜய் ஆண்டனியின் மகள் மீரா மறைவால் இன்று வெளியாகவிருந்த லியோ படத்தின் போஸ்டர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான் நடித்துள்ள படம் லியோ. அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது.
செப்டம்பர் 17-ஆம் தேதி லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் வெளியான 32 நிமிடங்களில் இஸ்டாகிராமில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றது. இதன்மூலம் 33 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற புஷ்பா 2 படத்தின் சாதனையை முறியடித்தது. நேற்று லியோ படத்தின் கன்னட போஸ்டர் வெளியானது. இன்று லியோ போஸ்டர் வெளியாக இருந்த நிலையில் விஜய் ஆண்டனி மகள் மறைவால் போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மகள் மறைவால் வாடும் விஜய் ஆண்டனிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்காகவும் உங்களுடைய குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். இன்று வெளியாகவிருந்த லியோ போஸ்டர் நாளை ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
வந்தாச்சு ஜியோ ஏர்பைபர் இணைய சேவை: ஜியோ பைபர்-ஐ மிஞ்சும் வேகம்!
பாஜக கூட்டணி… எடப்பாடியுடன் கருத்து வேறுபாடா? வேலுமணி பதில்!