Leo OTT Release date

ஓடிடியில் வெளியாகவுள்ள ‘லியோ’.. எப்போது? எந்த தளத்தில்?

சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் – திரிஷா என்ற ஒரு 90ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியா கூட்டணியின் நடிப்பில் தயாரான ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 அன்று திரையில் வெளியானது. Leo OTT Release date

அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மடோனா செபாஸ்டியன், மிஷ்கின், மன்சூர் அலி கான் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருந்த இப்படம், வெளியான முதல் நாளே ரூ.148.5 கோடி வசூல் செய்து, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனில் புதிய சாதனை படைத்திருந்தது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமடைந்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

மாஸ்டர், விக்ரம், மாவீரன் என பல ஹிட் படங்களுக்கு படத்தொகுப்பு செய்த பிலோமின் ராஜ், இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படி, பல அசத்தலான கலைஞர்கள் பணியாற்றிய இந்த ‘லியோ’ திரைப்படம், உலக அளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இதை தொடர்ந்து, இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 24 அன்று வெளியாகவுள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படம், நவம்பர் 24 அன்று இந்தியாவில் மட்டுமே வெளியாகும் என்றும், உலகில் உள்ள மற்ற நாடுகளில் நவம்பர் 28 அன்றே வெளியாக உள்ளதாகவும், நெட்பிளிக்ஸ் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த நவம்பர் 19 அன்று ‘நா ரெடி தா’ பாடலில் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. Leo OTT Release date

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை: மகளிர் ஆணையம் பரிந்துரை!

ரஜினிக்கு கதை சொன்ன கெளதம் வாசுதேவ் மேனன்

3 வருடங்களாக ஆளுநர் என்ன செய்துகொண்டிருந்தார்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்!

நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *