இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ.
சமீபத்தில் லியோ படத்தின் ட்ரெய்லரை படக் குழு வெளியிட்டது. படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள், கெட்ட வார்த்தை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வந்தனர்.
மேலும் பிரபல திரையரங்கில் லியோ ட்ரெய்லரை வெளியிட்ட போது ரசிகர்கள் செய்த அட்டூழியங்களும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது.
இப்படி பல சர்ச்சைகளும் விமர்சனங்களும் லியோ படத்தை சுற்றி பூதம் போல் கிளம்பினாலும், இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் தயாரிப்பாளர் லலித் குமாரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர்.
சமீபத்தில் சில தனியார் யூடியூப் சேனல்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த நேர்காணலில் லியோ படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார். லோகேஷின் பதில்கள் அனைத்தும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் லியோ படத்தின் சென்சார் குறித்த சுவாரசியமான தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் லலித் குமார் ரசிகர்களுடன் லியோ படம் குறித்து பேசியபோது சென்சார் போர்டு லியோ படத்திற்கு அதிக கட்டுகள் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது லியோ சென்சார் போர்டு சான்றிதழ் குறித்த ஓர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
அந்த பதிவில் லியோ படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள், போதை பொருள் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள், கெட்ட வார்த்தைகள் என மொத்தம் 13 கட்டுகளை சென்சார் போர்டு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இறுதியாக தற்போது லியோ படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள்.
லியோ படத்தில் பல பிரபல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசன் லியோ படத்திற்கு குரல் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. லியோ LCU படமா? என்பதை தெரிந்து கொள்ள படம் வெளியாகும் 19ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
ரூ.1 லட்சம் வங்கி மோசடி…. நிர்மலா சீதாராமனுக்கு தயாநிதிமாறன் கேள்வி!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2-வில் நடிக்கும் பாவனி ரெட்டி?