விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்று (அக்டோபர் 4) பெறப்பட்டுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ளது.
ஏற்கெனவே படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் டிரெய்லர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி ரிலீசாகும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழுவினர் இன்று வழங்கியுள்ளனர்.
#LEO CENSORED U/A 🔥 pic.twitter.com/FtNdFd0AYV
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 4, 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட 4 திரைப்படங்களும் யு/ஏ சான்றிதழையே பெற்றிருந்தன.
அதேபோன்று தற்போது அவரின் 5வது படமான லியோ திரைப்படமும் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்திய வீரர்களை ஏமாற்ற முயற்சி…. போராடி தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா