நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி உள்ள படம் லியோ. இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதால் படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் லியோ படத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு சிறப்பு காட்சி தான் திரையிடப்பட வேண்டும். முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும், நள்ளிரவு 1.30 மணிக்குள் அனைத்து காட்சிகளும் முடிந்து இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
இத்தனை தொடர்ந்து லியோ படத்திற்காக டிக்கெட் புக்கிங் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கூட மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் ஐ மேக்ஸ் காட்சி (IMAX Format premium show) டிக்கெட் புக்கிங் அமெரிக்காவில் கேன்சல் ஆகியுள்ளதாம். இன்னும் IMAX Format தயாராகாததால் தான் டிக்கெட் புக்கிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான டிக்கெட்கள் கேன்சலாகியுள்ளதாம். தற்போது டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு பணத்தை ரீஃபண்டு செய்து கொண்டிருக்கிறார்களாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா