விஜய் நடித்து வரும் லியோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இந்த இருவரின் கூட்டணி இணைந்துள்ளது.
இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக ஏமாற்றத்தை அளித்தது.
இதனையடுத்து தற்போது முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது லியோ.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதங்களுக்கு மேலாக காஷ்மீரில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடந்து வருகிறது.
இதற்கிடையே விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜுன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ’ரெடியா?’ என்ற வார்த்தையை ட்விட் செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.
இதனால் ரசிகர்கள் நிச்சயம் அப்டேட் இருக்கு என்று எதிர்பார்த்தனர். அதன்படியே படக்குழு ஒரு அட்டகாசமான அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீஸ் ஸ்டூடியோஸ் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜுன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ’நா ரெடி’ என்ற பாடல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன் விஜயின் லியோ பட கெட்டப்பையும் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜூன் மாதம் என்றாலே விஜய் ரசிகர்களுக்கு திருவிழா என்ற நிலையில், அவரது பிறந்தநாளில் முதல் சிங்கிள் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இரு இன்னிங்ஸிலும் சதம்: வங்கதேச வீரர் அபார சாதனை!
”ஆதிபுருஷ்”: ட்விட்டர் விமர்சனம் இதோ!