நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தயாரிப்பு நிறுவனம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தமிம் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து உறுதியான இடத்தையும் பிடித்து வைத்திருக்கிறார்.
நடிகர் விஜய் இன்று (ஜூன் 22) 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளை லியோ படக்குழுவும் அப்டேட்டுகளுடன் கொண்டாடி வருகிறது. இன்று லியோ படத்தின் முதல் பாடலான “நா ரெடி’ பாடல் வெளியாக உள்ளது.
முன்னதாக இந்த பாடலின் 33 விநாடிகள் கொண்ட புரோமோ வெளியாகி 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும் இந்த பாடல் விஜய்யின் அரசியல் வருகையை சுட்டிக்காட்டுவதாகவும் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நள்ளிரவு 11.59 மணிக்கு லியோ படத்தயாரிப்பு நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்துடன் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
கையில் ரத்தம் தெரிக்கும் சம்மட்டியுடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் விஜய் போஸ்டரில் இருக்கிறார். இந்த போஸ்டரில் மிகவும் கோபமாக பனி பிரதேசத்தில் இருக்கும் ஒரு ஓநாயும் இடம்பெற்றுள்ளது.
இந்த போஸ்டரை பகிர்ந்து ரசிகர்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் #leofirstlook என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெட்ண்டாகி வருகிறது.
மோனிஷா
உக்ரைன் சீரமைப்புக்காக மூன்று பில்லியன் டாலர் வழங்கும் ரிஷி சுனக்!
இந்துத்துவமும் இந்திய மொழிகளின் இருத்தலியல் சிக்கல்களும்!