leo booking will going to break all time record in kerala

கேஜிஎப் 2 பட இமாலய வசூல் சாதனையை முறியடித்த லியோ!

சினிமா

கேரள மாநிலத்தில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் முன்பதிவு வசூல், கேஜிஎஃப் 2 சாதனைகளை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான அதீத எதிர்பார்ப்பு தற்போது முன்பதிவில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டை தாண்டி, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் லியோ படத்திற்கான முன்பதிவு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

அதேபோன்று இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட கேரளாவிலும் லியோ படத்திற்கான முன்பதிவு உச்சத்தை எட்டியுள்ளது.

கேரளாவில் பட வெளியீட்டு உரிமையை ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் பெற்றுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 600 க்கும் மேற்பட்ட திரைகளில் சுமார் 2600 க்கும் மேற்பட்ட காட்சிகளில் லியோ வெளியாக உள்ளது. மேலும் 4 மணி காட்சிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது கேரளாவில் படத்திற்கான வசூல் வேட்டையை அதிகப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தற்போது லியோ படத்திற்கு டிக்கெட் வாங்குவதற்காக கேரள திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திருச்சூர், கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் பல்வேறு நகரங்களில் உள்ள திரையரங்குகளில், முன் எப்போதும் இல்லாத வகையில் டிக்கெட் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

தற்போது வரை முன்பதிவில் மட்டும் ரூ. 7.5 கோடி வசூலை தாண்டியுள்ள லியோ, கேரளாவில் யாஷின் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 மற்றும் மோகன்லாலின் ஒடியன் ஆகிய திரைப்படங்களின் முதல்நாளை வசூலை தாண்டியுள்ளது.

இதற்கு முன்பு கேரளாவில் ரூ 7.3 கோடியுடன் அதிகபட்ச முன்பதிவு வசூலை பெற்ற சாதனை படமாக KGF 2 இருந்தது.

இன்னும் படம் வெளியாக 3 நாட்கள் உள்ள நிலையில், கேரள பாக்ஸ் ஆபிஸில் லியோவின் முன்பதிவு வசூல் மட்டும் ரூ. 10 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் லியோ படத்திற்கான முன்பதிவு தீவிரம் அடைந்துள்ளது. அதேவேளையில் வட இந்திய மாநிலங்களில் லியோ படத்திற்கான வரவேற்பு மிக குறைவாக உள்ளதை காண முடிகிறது. இது லியோ படத்திற்கான பின்னடைவாக சினிமா வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ENG vs AFG: ஆப்கானிஸ்தான் வெற்றியால் உயிர்பெறும் உலகக்கோப்பை!

உணவளித்தவரின் இறுதிச்சடங்கு: கண்ணீர் சிந்திய குரங்கு

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
0
+1
1