நடிகை பார்வதியுடன் இணைந்த லீனா மணிமேகலை

சினிமா

ஆவணப் பட இயக்குநரான லீனா மணிமேகலை, அடுத்து நடிகை பார்வதியுடன் இணைகிறார்.

ஆவணப் பட இயக்குநரான லீனா மணிமேகலை சர்ச்சைக்கும் பெயர்போனவர். இயக்குநர் சுசி கணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில், அவரிடம் இருந்து பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் லீனா மணிமேகலை. அதைத் தொடர்ந்து, அவர் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரில் காளி தெய்வம் புகைப்பிடிப்பது போன்று சித்தரித்து சர்ச்சையில் சிக்கினார்.

இதுதொடர்பாக நாட்டின் பல இடங்களில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் அவர் அடுத்து இயக்கப்போகும் படத்தில், நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு ’தன்யா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிராமி விருது வென்ற தயாரிப்பாளர் அபூர்வா பக்சி இந்த படத்தை தயாரிக்கிறார். இதுகுறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் லீனா மணிமேகலை. இந்தப் படம் சகோதரிகளின் பாசத்தை வலியுறுத்தும் விதமாக அதேசமயம் திரில்லராக உருவாக இருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை! கண்ணீர் விட்ட அசீம்

மனைவி கொடுத்த முதல் பரிசு : வெளிப்படையாக பேசிய ரிஷப் ஷெட்டி

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.