ஒவ்வொரு விழாக்களிலும் நான் இரண்டு விஷயங்களைக் கடைப்பிடிக்கிறேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஆர்.வினோத் குமார் இயக்க, விஷால் நடிக்கும் படம் ‘லத்தி’, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படம், வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதையடுத்து, ‘லத்தி’ படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக இன்று (டிசம்பர் 13) மதுரையில் நடைபெற்ற விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்த திரைப்படம் என்னுடைய கேரியரில் முக்கியமானதாக அமையும். ’நீங்கள் திரையுலகில் 18 ஆண்டுகளாக நீடிக்கிறீர்கள், அது எப்படி முடிகிறது’ என எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.
அதற்கு ஒரே பதில், மேலே இருக்கும் சாமியும், கீழே இருக்கக்கூடிய சாமியுமே (நீங்களும்) காரணம். நீங்கள் கொடுக்கும் ஆதரவினால்தான், உங்களில் இருக்கக்கூடிய ஒருவனான நான், இங்கு இன்று நிற்கிறேன்.
ஒவ்வொரு முறையும் நான் மதுரைக்கு வந்து படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளும் போதெல்லாம் என்னை மக்கள் வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமோக வரவேற்பு அளிப்பர்.
’லத்தி’ படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போது, என் கையில் லத்தி ஒன்றைக் கொடுத்து ’ஏதாவது ஒரு ஸ்டைல் செய்யுங்கள்’ என்று கேட்டனர். அப்போது என் நினைவுக்கு வந்தது ‘மருது’ திரைப்படம்தான்.
வேட்டியை நார்மலாகக் கட்டுவோம். ஆனால், வேட்டியை சுழற்றிக் கட்டி நடித்த படம்தான் ‘மருது. அதே பாணியில் ‘லத்தி’ படத்திலும் லத்தி சுழற்றுகிற ஸ்டைலை செய்துள்ளேன்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நான் சென்று விழாக்களில் கலந்து கொள்ளும்போது இரண்டு விஷயங்களைக் கடை பிடிக்கிறேன். ஒன்று, பூச்செண்டையோ, சால்வையோ நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்.
அது, வெறும் 5 அல்லது 10 நிமிடம் மட்டுமே நீடிப்பது. ஆனால், நீங்களும் நானும் அளிக்கும் நிதியால் இன்று, இரண்டு குழந்தைகள் கல்வியறிவு பெற்று வருகின்றனர்.
இது, நான் செய்யும் இரண்டாவது விஷயம். மதுரை மாவட்டத்தில் எனக்கு கிடைக்கும் அன்பு, பாசம் என்பது சாதாரண விஷயமல்ல.
இது, கடவுள் கொடுத்த வரம். இந்த படத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்ய இருக்கிறேன். அது நீங்கள் கொடுக்கும் இந்த படத்துக்கான டிக்கெட்டின் விலையில் ஒரு ரூபாயை எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்க இருக்கிறேன்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
உதயநிதியை அமைச்சராக்குவதில் அவசரம் ஏன்: தினகரன் கேள்வி!
விவாகரத்து: சோகத்தில் ஹன்சிகா குடும்பம்!
‘நண்பேன்டா’ மானுக்கு உதவிய குரங்கு வைரல் வீடியோ!