என் மகனே மீண்டும் பிறந்திருக்கிறான் – தர்ஷனால் கொல்லப்பட்ட ரேணுகாசாமி தந்தை உருக்கம்!

சினிமா

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஜூன் 8 ஆம் தேதி பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியதால் அவரின் ஆண் நண்பரான நடிகர் தர்ஷனால் ரேணுகாசாமி கொல்லப்பட்டார்.  இந்த கொலை வழக்கில்  நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை பவித்ரகவுடா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.

தர்ஷனுக்கு முன்ஜாமீன் மனுவும் மறுக்கப்பட்டுள்ளது. அவரின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, தர்ஷன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் வாதாடினார்.  அதற்கு ஆட்பேசனை தெரிவித்து அரசு வக்கீல் பிரசன்னகுமார் வாதம் செய்தார்.  தொடர்ந்து, தர்ஷனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட போது, அவரின் மனைவி ஷாகானா 5 மாத கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சித்ரதுர்காவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, ரேணுகாசாமியின் தந்தை காசிநாதையா, தனது மருமகள் குழந்தையை பெற்றெடுக்க உதவிய மருத்துவர்கள், நர்சுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். ஆண் குழந்தை பிறந்திருப்பதால் தங்கள் மகனே மீண்டும் பிறந்திருப்பதாக கருதுவதாக கண்களில் நீர் மல்க தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

நெல்லை: நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்களுக்கு அடி, உதை… சமூக நலத்துறை விசாரணை!

உங்கள் நாட்டுக்கு போங்கள்… தமிழரிடம் கனடிய பெண் இனவெறி பேச்சு!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0