வாரிசை தொடர்ந்து வாத்தி படத்தை லலித்குமார் வெளியிடவுள்ளார்.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிகல பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வாத்தி.
இந்தப் படத்தின் தமிழக உரிமை தொடக்கத்தில் 10 கோடி ரூபாய் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. 8 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்குவதற்கு பலரும் முயற்சித்தனர்.
தற்போது, வாரிசு படத்தை தொடர்ந்து வாத்தி படத்தின் தமிழ்நாடு உரிமையை செவன் ஸ்கீரின் லலித்குமார் 13 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாத்தி 2023 பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 12 வாரிசு படம் வெளியாகிறது.
அதனை தொடர்ந்து நான்கு வாரம் கழித்து வாரிசு வெளியாகும் திரையரங்குகளில் வாத்தி ரிலீஸ் செய்ய லலித்குமார் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இராமானுஜம்
தாலிபான்களின் புது கண்டிஷன்: அமெரிக்கா கண்டனம்!
இஸ்லாமிய ஆசிரியைக்காக, வீல்சேரில் சபரிமலை செல்லும் மாற்றுத் திறனாளி