நடிகர் ரஜினிகாந்தின் மகளாக அறியப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் வெளியான 3, கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை போன்ற படங்களின் மூலமாக இயக்குனர் என்ற ஓர் தனி அடையாளத்தை உருவாகி கொண்டார்.
தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லால் சலாம் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
லால் சலாம் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் ஸ்பெஷல் அப்பியரன்ஸில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். கிரிக்கெட் மற்றும் கம்யூனிசத்தின் பின்னணியை கதைக்களமாக கொண்டு லால் சலாம் படம் உருவாகியுள்ளதாக சில தகவல்கள் வெளியானது.
லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி டிரெண்டானது. அதன்பிறகு லால் சலாம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஹெல்த் டிப்ஸ்: அக்குள் வியர்வை நாற்றத்தை போக்க இயற்கை வைத்தியம் இதோ!
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு!