‘லால் சலாம்’ படப்பிடிப்பு நிறைவு: படக்குழு அறிவிப்பு!

Published On:

| By Jegadeesh

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை வைத்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ப்ரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். படத்தில் தனுஷ் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். ஆனால் , எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ரோகித் விக்கெட்டை வீழ்த்துவது சாதாரணம்…சிஎஸ்கே வீரர் விளக்கம்!

அதிமுக பொதுச்செயலாளர்: அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel