லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடிக்கும் சிறப்பு தோற்றம் இன்று (மே 8) வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் மகள் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு செஞ்சி, அத்தியூர், சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இந்தநிலையில் ரஜினிகாந்தின் சிறப்பு தோற்ற போஸ்டரை லால் சலாம் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.
சண்டைக்காட்சிகளின் பின்னணியுடன் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடந்து வரக்கூடிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மும்பையை கதைக்களமாக கொண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படமும் மும்பையின் தாராவி பகுதியை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மீண்டும் மும்பையை மையமாக வைத்து லால் சலாம் படம் உருவாகி வருவதால் இந்த படமும் வெற்றி பெறும் என்று ரஜினி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
செல்வம்
வெளிநாட்டில் வேலையிழந்து திரும்புவோர் கடனுதவி பெறுவது எப்படி?: ஆட்சியர் விளக்கம்!