தங்கையுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய நயன்தாரா

சினிமா டிரெண்டிங்

இன்று (ஆகஸ்ட் 11 ) இந்தியா முழுவதும் ரக்‌ஷா பந்தன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேஜிஎஃப் நாயகன் யாஷ் தனது சகோதரி உடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது. அதுபோன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது தங்கை கையால் ராக்கி கட்டிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்கும் நயன்தாரா மற்றும் அவரது தங்கை இருவரும் மாறி மாறி ராக்கி கட்டிக் கொள்கின்றனர். இந்த பதிவை வெளியிட்டுள்ள டாக்டர் ரினிதா ராஜன், எப்போதும் வலிமையான மனிதர்களில் ஒருவரான இவருடன் நட்பையும் சகோதரத்துவத்தையும், பரஸ்பரம் மரியாதையையும் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.