முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், ஓடிடி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10 முதல் ஒலிபரப்பு செய்யவுள்ளது. இந்த லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளது.
வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்த சீரிஸூக்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத் தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.
யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.
வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் முதல் வெப் சீரிஸ் இது என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு!
கேரளா குண்டுவெடிப்பு: மார்ட்டின் அளித்த கூடுதல் வாக்குமூலத்தால் பரபரப்பு!