kvn vijay 69

விஜய் 69 : விபரம் நாளை வெளியாகிறது….

சினிமா

நடிகர் விஜய்யின் கடைசி படத்தின் விபரங்கள் நாளை(செப்டம்பர் 14) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் இன்று(செப்டம்பர் 13) அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் சில வருடங்கள் முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாகவும், அவரது 69-வது படம்தான் அவரின் கடைசிப் படம் என்றும் அறிவித்திருந்தார்.

அவர் இப்படி திடீரென அறிவித்தது ்விஜய் ரசிகர்களை ஒரு பக்கம் சோகத்தில் ஆழ்த்தினாலும், மறுபக்கம் அவரது கடைசி படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பின்னர் ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன்: அதிகாரம் ஒன்று’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய ஹெச் வினோத் தான் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவதாகத் தகவல் வெளியானது. இதைச் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட ஹெச் வினோத் உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில், விஜய்யின் கடைசிப் படத்தைத் தயாரிக்கப்போகும் கே.வி.என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம், படம் பற்றிய விபரங்கள் நாளை மாலை அறிவிக்கப்படும் என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

விஜய்யின் கடைசி படத்தைத் தயாரிக்கப் போகும் கே.வி.என் நிறுவனம்  2020 ஆண்டு வெங்கட் நாராயண என்பவரால் பெங்களூருவில் ஆரம்பிக்கப்பட்டது. ‘சகத்’ ‘பை டூ லவ்’, போன்ற கன்னட படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், ‘சீதா ராமம்’ 777 சார்லி, RRR போன்ற படங்களை விநியோகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

இந்த வார ஓடிடி ரிலீஸ்: கல்பலி ரெக்கார்ட்ஸ் முதல் பச்சன் வரை!

கூலி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?- நடிகர் உபேந்திராவின் விசித்திர விளக்கம்!

அதிகபட்ச வெப்பநிலை தொடரும்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *