எமோஷனல் ஃபேமிலி டிராமா திரில்லராக உருவாகியுள்ள ‘குற்றச்சாட்டு’ படம் மூலம் இயக்குநராக விமல் விஷ்ணு அறிமுகமாகிறார். மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். தவிர, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
கதையின் நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வரக்கூடிய நடிகர் கருணாகரன் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர்கள் பரத், தினேஷ் பிரபாகர், முன்னா சைமன், ரியாஸ் கான், ஷிவானி (குழந்தை நட்சத்திரம்) மற்றும் பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரானா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் விமல் விஷ்ணு கூறும்போது படம் பற்றி கூறுகிறபோது,
“கொச்சியில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அப்படி கொச்சியில் குடியேறிய அப்பா, அம்மா மற்றும் அவர்களின் அன்பு மகள் இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் ‘குற்றச்சாட்டு’. படம் ஆறு வெவ்வேறு அடுக்குகளுடன் நான் லீனியர் முறையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தையும் ஈர்க்கும் வகையில் எமோஷனல் மற்றும் த்ரில்லர் தருணங்களின் கலவையாக இருக்கும். படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன” என்றார்.
சுரேஷ் நந்தன் இசையமைக்க, நிதின் சேகர் ஆர்.கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டிவைன் பிளாக்பஸ்டர் சார்பில் ராஜேஷ் மாதவன், சஜனி ராஜேஷ், தயன் ஷங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதி ஆகியவை குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இராமானுஜம்
மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது? – 2
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் பணி!